சென்னை: 

மிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், வரும் ஏப்ரலுக்குள் மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மின்சாரம் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் கட்டணத்தை திருத்த வேண்டும். “ஒவ்வொரு ஆண்டு  நவம்பரிலும் மொத்த வருவாய் தேவையை கணக்கில் கொண்டு, ஏப்ரல் மாதத்திற்குள் புதிய கட்டணத்தை அறிவிக்க வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக, தமிழக அரசு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்டண திருத்தம் செய்வதைத் தவிர்த்து வருகிறது.

மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டி.என்.இ.ஆர்.சி) மொத்த வருவாய் தேவையை (ஏ.ஆர்.ஆர்) சமர்ப்பிக்குமாறு டாங்ஜெட்கோவிடம் அறிக்கை கேட்டு, கட்டண திருத்தம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.

இதன் அறிக்கை கிடைத்தவுடன், கட்டணத்தை திருத்துவதற்கான செயல்முறை மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோருடன் கமிஷன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதன் மூலம் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான ஆரம்பக்கட்டப்பணி தொடங்கும் என்றும், உள்ளாட்சி தேர்தல்கள் முடிவடைந்த பிறகு இதற்கான உத்தரவுகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை  ஆணையம் நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் என்று தெரிகிறது

“பிப்ரவரி இறுதிக்குள் டாங்கெட்கோ தனது கட்டண திருத்த கோரிக்கையை சமர்ப்பித்தால், ஜூலை மாதத்திற்குள் கட்டண திருத்தம் குறித்த இறுதி உத்தரவு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக டான்ஜெட்கோ அதிகாரி தெரிவித்து உள்ளார்…

ஏற்கனவே தமிழகத்தில்   “அனைத்து நுகர்வோருக்கும் பில்லிங் சுழற்சிக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை   அரசு அறிவித்ததால், கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியத்திற்கு வருவாய் கிடைக்கவில்லை..  மேலும்,  குடிசைகள், நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சக்தியும் கூடுதலாகி வருகிறது… இதற்காக மின்சார வாரியத்துக்கு அரசு மானியம் வழங்கினாலும், இழப்பை சரிகட்ட முடியவில்லை என்றும், இதன் மின் கட்டண உயர்வுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி உறுதிப் படுத்தி உள்ளார்.