கொழும்பு:
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா, “இந்திய (தமிழக) மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது!” என்று ஆணவத்துடன் இன்று பேசியது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மீன்வளத்துற அமைச்சர் மகிந்தா அமரவீரா, இன்று தன் துறை சார்பான கூட்டத்தில் கலந்துகொண்டார். பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவுடன் நல்லெண்ண உறவையே விரும்புகிறோம். அதே நேரம் இந்திய (தமிழக) மீனவர்கள் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இதை ஏற்க முடியாது” என்றார்.
மேலும்,” அத்துமீறி இலங்கை பகுதிக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதைவிட சுடுவது எளிதானது” என்று ஆணவத்துடன் பேசினார்.
அவரது பேச்சு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
“இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களை எதிர்த்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ஆணவத்துடன் பேசியிருக்கிறார். இனியேனும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தார்கள்.