டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் நாட்டின் டோரிஷிமா தீவு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை காலை 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இகூ தீவில்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி,  டோரிஷிமா அருகே 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, இசு தீவுகளுக்கு ஜப்பான் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சுனாமி ஒரு மீட்டர் உயரத்தை எட்டக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இசு தீவுகளில் உள்ள மக்கள் கரையோரங்கள் மற்றும் ஆற்றின் வாய்ப்பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுரை கூறுகிறது.
டோரிஷிமா தீவுக்கு அருகே காலை 11 மணியளவில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.