ஸ்டாக்ஹோம்

நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட பல துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

தற்போது இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இன்று இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.  2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் போஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜான் போஸ் கவிதை, சிறுகதைகள், குழந்தை இலக்கியம், கட்டுரைகள், நாடக வசனம் என பன்முக இலக்கியத் தன்மை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.