சென்னை: சென்னை அண்ணாலை பகுதியில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், கட்டிடங்களில் பணியாற்றிய பலர் அலடி அடித்துக் கொண்டு, வெளியேறி, சாலைகளில் குவிந்தனர்.

சமீப காலமாக உலகம் முழுவதும் ஆங்காங்கே நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான கட்டிங்கள் இடிந்து விழுந்து நொறுங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து நியுசிலாந்திலும் நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை அண்ணாலை பகுதியல் நிலஅதிர்வு உணர்வு பட்டதாக கூறப்படுகிறது.   நில அதிர்வு காரணமாக அந்த பகுதியில் உள்ள அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்ட  வெளியேறினர்.

அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி மற்றும் 2 கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. அதுபோல அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தரவுகள் படி சென்னையில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.

மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், நிலநடுக்கம்  என்ற தகவல் தவறானது என்றும், நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை எனவும் மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

அதுபோல சென்னையில் நிலஅதிர்வு ஏற்படவில்லை என மத்தியஅரசின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறுகிய இடத்திற்குள் நில அதிர்வு ஏற்படாது என்று தெரிவித்துள்ளதுடன், அதற்கு வேறு காரணமாக இருக்கலாம் என தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக அண்ணாசாலை நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணி காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.