லடாக்
இன்று மதியம் லடாக் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் 2.37 மணியளவில் மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று மதியம் 2.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 3.8 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இன்று மதியம் வடமாநில பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]