ராஜ்கோட்
குஜராத் மாநிலத்தில் இன்று இரவு நிலநடுக்கம் ஏறப்பட்டுள்ளது.
இன்று இரவு சுமார் 8.13 மணிக்குக் குஜராத் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளது.
ராஜ்கோட் நகருக்கு 122 கிமீ தூரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது.
இந்த தகவலை தேசிய நில அதிர்வு துறை தெரிவித்துள்ளது.
இந்த பகுதி மக்கள் இதனால் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.