டோக்கியோ
மைக் டைசன் பாணியில் ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் எதிராளியின் காதை கடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் மிகவும் இளம் வயதில் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் 19 குத்துச் சண்டை போட்டிகளில் நாக் அவுட் முறையில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் சர்ச்சைகளிலும் மைக் டைசன் சாதனை படைத்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு இவர் தனக்கு எதிராக போட்டியிட்ட ஹோலிஃபீல்ட் காதை கடித்துத் துப்பினார். இதனால் அவர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்குபெறத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கடந்த வருடம் மீண்டும் போட்டியில் கலந்துக் கொண்டார்.
தற்போது டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் டேவிட் நைகா மற்றும் மொரோகா வீரர் யூனஸ் பல்லா மோதினர். இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் டேவிட் நைகாவின் காதை மொரோகா வீரர் யூனஸ் பல்லா கடித்துள்ளார். இது தற்போது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.