சுமத்ரா தீவு

ந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்து 4500 மீட்டர் உயரத்துக்குச் சாம்பல் வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள தீவுகளில் பல ஆபத்தான எரிமலைகள் உளன.  இங்கு இருபக்கமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளதால் பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.  இங்கு சுமார் 26 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இவர்களில் பலர் எரிமலை அபாயத்தால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை தற்போது வெடித்துள்ளது.   இந்த வெடிப்பு சுமார் 12 மணி நேரத்துக்கும் மேல் நீடித்துள்ளது.  இந்த எரிமலை வெடிப்பால் வானில் சுமார் 4500 மீட்டர் உயரத்துக்குச் சாம்பல்; வெளியேறி உள்ளது.   இந்த எரிமலை வெடிப்பு அறிகுறிகள் ஏற்கனவே தென்பட்டுள்ளது.

எனவே எரிமலைக்கு அருகில் சுமார் 5 கிமீ தூரம் வரை இருந்த மக்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  இதனால் யாரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.   இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 1 கிமீ தூரத்துக்கு அனல் அலைகள் வீசி வருகின்றன  இங்கு கடந்த 2019 ஆம் வருடம் மே மாதம் 2 ஆம் கட்ட வெடிப்பு ஏற்பட்டுள்ளது. .   இது மூன்றாம் கட்ட வெடிப்பு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.