சென்னை: பிரேசில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தலா ரூ.30ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
பிரேசிலில் மே 1-ம் தேதி 24-வது பாரா ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் பங்குகொள்ள உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைஏற்ற தமிழகஅரசு பிரேசிலில் நடக்கும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி விமான கட்டணமாக தலா 30,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.