மீண்டும் 156 நாட்டினருக்கு 5 ஆண்டு விசா சேவை ஆரம்பம் : மத்திய அரசு

Must read

டில்லி

ற்கனவே 156 நாட்டினருக்கு வழங்கி வந்த 5 ஆண்டு இ விசா சேவைகள் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு வர 165 நாட்டை சேர்ந்தவர்களுக்கு இ விசா வழங்கப்பட்டு வந்தது.  இது  5 ஆண்டுகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.  கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த இ விசா சேவையை மத்திய அரசு முற்றிலுமாக ரத்து செய்தது.    தற்போது உலகெங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

எனவே மத்திய அரசு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவருக்கான விசா சேவைகளை முன்பு போல் மாற்றி அமைக்க உத்தரவு இட்டுள்ளது.  இதன்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 156 நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இ விசா வழங்கும் சேவை தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இனி 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் இ விசா வழக்கும் சேவை தொடங்கி உள்ள்து. தவிர வழக்கமான பேப்பர் விசாக்களும் மீண்டும் வழங்கப்பட உள்ளது.   அமெரிக்காவில் ஜப்பானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 ஆண்டுக் கால விசாவைப் போன்ற விசாக்களும் விரைவில் வழங்கப்பட உள்ளது.

More articles

Latest article