நீலகிரி: ஊட்டி , கொடைக்கானலுக்கு இன்றுமுதல் மீண்டும் இ-பாஸ் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும்  சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனக் கடந்த 13 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி  நள்ளிரவு முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை நள்ளிரவு முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.

ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.

நீலகிரி , கொடைக்கானல் வர விரும்புபவர்கள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம்.

இ-பாஸ் விண்ணப்பித்துப் பெற பிரத்யேக இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்து, சரக்கு வாகனங்கள், நீலகிரி பதிவு எண் உள்ள வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொடைக்கானலிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது.  உள்ளூர் வாகனங்களை தவிர தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட உள்ளன.

கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களுக்கும் மட்டும் அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இபாஸ் நடைமுறை ஏப்ரல்1 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை  அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.