ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இ-பாஸ் நடைமுறையை அடுத்து இந்த ஆண்டு கோடை விடுமுறையில் சுற்றுலா வாகனங்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதம் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுசூழலைப் பாதுகாக்க வாகன எண்ணிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து IIT மற்றும் IIM நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகிறது.

இதனையடுத்து இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30 வரை கடைபிடிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.