வாஷிங்டன்,
ஈமெயில் விவகாரத்தில் ஹிலாரி மீது புதிய நடவடிக்கை ஏதுமில்லை என எப்.பி.ஐ. அறிவித்து உள்ளது.
ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார். அப்போது அவரது தனிப்பட்ட இ-மெயில் முகவரியை அரசு பணிக்கு பயன்படுத்தியது தொடர்பாக, அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) ஏற்கனவே விசாரணை நடத்தியது.
இதில் ஹிலாரி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி கடந்த ஜூலை மாதம் வழக்கை முடித்து விட்டது.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, குடியரசு கட்சி வேட்பாளர் மீண்டும், மீண்டும் ஹிலாரி மீது ஈமெயில் குற்றச்சாட்டு கூறியதையடுத்து, எப்.பி.ஐ. டைரக்டர் ஜேம்ஸ் கொமே மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து ஹிலாரியின் தனிப்பட்ட ஈ-மெயில்களை மீண்டும் ஆய்வு செய்ய எப்.பி.ஐ. அமைப்பு முடிவு செய்தது. இதற்கான அனுமதியை பெற்று ஜேம்ஸ் கொமே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கினார்.
இதன் காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரியின் செல்வாக்கு குறைய தொடங்கியது.
இதற்கிடையில், ஹிலாரி மீது புதிய நடவடிக்கை ஏதுமில்லை. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அறிவித்தது போல் ஹிலாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த முகாந்திரம் இல்லை என எப்.பி.ஐ. டைரக்டர் ஜேம்ஸ் கொமே அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel