வரலாற்றில் இன்று 08.11.2016
இன்று நவம்பர் 8  கிரிகோரியன் ஆண்டின் 312 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1520 – டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. 
1889 – மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.
1895 – எதிர்மின் கதிர் சோதனையில் வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1923 – மியூனிக் நகரில் ஹிட்லர்,  ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
2006 – பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1656 – எட்மண்ட் ஹேலி, பிரிட்டன் வானியல் ஆராய்ச்சியாளர் (இ. 1742)
1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742)
1893 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (இ: [[1964])
1900 – ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர், (இ. 1976)
1923 – ஜாக் கில்பி, அமெரிக்க மின்னியல் பொறியாளர், (இ. 2005)
1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி
1984 – நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
2000 – சோ. சிவபாதசுந்தரம்,  பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (பி. 1912)
2014 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)