சென்னை,

வானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு மீது தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

இன்று சட்டசபையில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேரள அரசு மீது ஓரிரு நாளில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அறிவித்தார்.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட, கேரள அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.

மன்னார்காடு தாலுகாவில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், பவானி ஆற்றில் நீரை தேக்கி வைக்க தடுப்பணைகள் வேண்டும் என,  மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்திடம்  கேரள அரசு மனு தாக்கல் செய்தது.

அவர்களும் அனுமதி கொடுத்துள்ள நிலையில்,  அணை கட்ட கேரள அரசு முயற்சித்து வருகிறது.

இந்த விவகாரம் சட்டசபையில், இன்று எதிரொலித்தது. தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில், இரண்டு நாட்களில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.