சென்னை

மிழகக் காவல்துறைக்காக சிசிடிவி உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகக் காவல்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் வாக்கி டாக்கி கொள்முதலில் நடைபெற்ற மாபெரும் ஊழல் அம்பலமாகியது.   ஆனால் இது தொடர்பாக நடந்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.  இவ்வாறு வாக்கி டாக்கி முறைகேட்டிற்கே இன்றுவரை தீர்வு எட்டப்படாத நிலைஉள்ளது.

இந்நிலையில் தமிழகக் காவல்துறையில் மேலும் ஒரு மாபெரும் ஊழல் அம்பலமாகியுள்ளது.   காவல்துறையை  நவீனப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் சிசிடிவி கேமிரா கொள்முதலில் ரூ.350 கோடி ரூபாய் அளவுக்கு மாபெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக  ஒதுக்கப்பட்ட தொகையை விட இருமடங்கு அதிக தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி விட்டதும், அந்த ஒப்பந்தப்புள்ளியிலும் உரிமம் இல்லாத ஒரே ஒரு நிறுவனத்தைப் பங்கேற்கச் செய்து அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தத்தை வழங்கி  ஊழல் செய்தது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநரைச் சந்தித்து எதிர்கட்சியினர் மனு அளிக்கத்தனர்.   அத்துடன் , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

காவல்துறை புதிய ஊழல் விவகாரமும் பூதாகரமாகும் என்பதால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையைச் சீர்படுத்தி ஊழலைத் தடுப்பதுடன் தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.