கடலூர்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில்  இன்று காலை வந்ரத லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த  2011-16  காலக்கட்டத்தில், அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டென்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் , அதிமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில், இன்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நமடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார்  பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

[youtube-feed feed=1]