சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் Centre for Affiliations மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள், உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2023-24 கால கட்டத்தில் 480 கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.

முன்னதாக, பொறியியல் கல்லூரிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதில் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உற்கட்டமைப்புகள் முறையாக இல்லாத நிலையில், அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர், இது தொடர்பாக 141 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்டது.
இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்த நிலையில், அதுகுறித்து லஞ்ச ஒழிப்புகாவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. போலி ஆசிரியர்களால் ஏற்பட்ட முந்தைய சிக்கல்களைத் தொடர்ந்து, இணைப்பு செயல்முறையின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக, ஆசிரியர்களுக்கான ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் ஆய்வுகளின் வீடியோ பதிவு போன்ற புதிய நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுத்தியுள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் பயோமெட்ரிக் வருகையை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.