சென்னை

இம்மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இம்மாத இறுதியோடு ஓய்வுபெறும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதம் பணி நீட்டிப்பு வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும் மருத்துவர் தேர்வாணையம் மூலம் 1323 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பணியானை கிடைத்தவுடன் பணியில் சேருமாறு அரசு அறிவித்துள்ளது.

தற்போது 1742 பேருக்கு தமிழகத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.