துருக்கியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரழிவு காரணமாக சுமார் 10000க்கும் அதிகமானோர் இருந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது இதனையடுத்து சில மணி நேரங்களில் 7.5 அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது பின்னர் நேற்று மாலை 6.0 அளவுள்ள மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து அடுக்குமாடி குறியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை சீட்டுக்கட்டுகள் போல் அடியோடு சாய்ந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பலியாகினர்.

இந்த நிலையில், இந்த நிலநடுக்கம் குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹுகர்பீட்ஸ் ஏற்கனவே கணித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிப். 3 ம் தேதி இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிராங்க் ஹுகர்பீட்ஸ், “மத்திய துருக்கி, சிரியா, ஜோர்டான், லெபனான் உள்ளிட்ட பகுதியில் உடனடியாக அல்லது ஒரு சில நாட்களில் ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்படும்” என்று பதிவிட்டிருந்தார்.

நிலநடுக்கம் குறித்து அறிவியல் பூர்வமாக முன்கூட்டியே அறியக்கூடிய செயல்முறை இதுவரை இல்லை என்ற நிலையில் பிராங்க் ஹுகர்பீட்ஸ் இதுகுறித்து முன்கூட்டியே கணித்தது எப்படி என்பது குறித்த கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரிதும் எழுப்பப்பட்டது.

கி.பி. 115 மற்றும் கி.பி. 526 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்றதொரு பேரழிவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கிரக நிலைகள் அப்போது எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு கிரக நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கிய நிலையில் சர்வதேச நாடுகளின் உதவியை நாடி மிகவும் பரிதாபமான நிலையில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில் இதுகுறித்து ஏற்கனவே கணிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.