துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கி தரைமட்டமான நிலையில், பாரம்பரிம் மிக்க  2200 ஆண்டு பழமைவாய்ந்த காசியான்டெப் கோட்டையும் உடைந்து நொறுங்கி சிதைத்துபோனது. இந்த பாரம்பரியமான மற்றும் பழமையான கோட்டை  அண்மையில் புனரமைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில்,  தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பழமையான காசியான்டெப் கோட்டை தரைமட்டமானது.

துருக்கியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்தன. அதில், 2200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காசியான்டெப் கோட்டையும் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. ரோமானியர்கள் காலத்தில் ஹிட்டிடி என்ற பேரரசு இந்த கோட்டையைக் கட்டியதாக கூறப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் காவல் கோபுரமாக இக்கோட்டை பயன்படுத்தப்பட்டு வந்தது.

காலப்போக்கில் சிதிலமைடந்த கோட்டை, அண்மையில் புனரமைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில், நிலநடுக்கத்தால் இந்த கோட்டை தரைமட்டமானது. இதே போன்று அந்நாட்டின் பல்வேறு பாரம்பரிய கட்டடங்களும் நிலநடுக்கத்தால் உருக்குலைந்தன.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து இடிந்து தரைமட்டமாகின. தற்போது வரை 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.