சென்னை: குலசை தசரா விழா மற்றும் விஜயதசமி, ஆயுத பூஜையையொட்டி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகினற்ன.
புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா பெருவிழாவை முன்னிட்டு, சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டனத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், விஜயதசமி, ஆயுத பூஜை கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டனம் மற்றும் திருச்செந்தூரில் தசரா விழா வெகு சிறப்பாக கொண்டாட்டப்படும். இதற்காக பல லட்சம் பேர் குலசையில் குவிவார்கள். இதனையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
அந்தவகையில் தசரா விழாவுக்காக குலசேகரப்பட்டனம் மற்றும் திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்களுக்காக சென்னை மற்றும் கோவையில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் இருக்கும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குலசேகரப்பட்டனம், திருச்செந்தூர் செல்ல விரும்பும் பக்தர்கள் சென்னை, கோவையில் இருந்து இயக்கப்படும் தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைனிலும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை தசரா விழா சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டனத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது, அக்டோபர் 13 முதல் 16 ஆம் தேதி வரை திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டனத்தில் இருந்து திரும்புவதற்கும் முன்பதிவுசெய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய விரும்புவர்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான www.tnstc.in அல்லது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின்அதிகாரப்பூர்வ செயலி (TNSTC official app)-க்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஆயுத பூஜை அக்டோபர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அடுத்த நாளான சனிக்கிழமை விஜயதசமி பூஜை கொண்டாடப்படு கிறது. இனையொட்டி, சென்னை, கோவையில் இருக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். தொடர் விடுமுறை வாரம் என்பதால் பேருந்து, ரயில்களில் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் இருக்கும். இதனால், சென்னையில் இருப்பவர்கள் ஓரிரு நாட்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்வதை திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
குறிப்பாக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் அக்டோபர் 10 ஆம் தேதி, 11 ஆம் தேதி வரை காத்திருக்காமல் அதற்கு முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாவது சிறந்தது.
வழக்கம்போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விஜயதசமி, ஆயுத பூஜை விடுமுறைகளையொட்டி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கும். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இருப்பினும் இந்த சிறப்பு பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதையும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.