சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அமர்வின் கேள்வி நேரத்தின்போது, கேள்வி எழுப்பிய தவாக தலைவர் வேல்முருகனுக்கும், அதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் வேல்முருகனை கண்டித்தார்.

இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பேரவையில் தவெகா வேல்முருகன், தனது தொகுதியை விடுத்து, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன், பவானி தொகுதி பிரச்சனையை பேச அந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. உள்ளார் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். இதனால் வேல்முருகன் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு அடுத்த கேள்விக்கு சென்றார். இதனால் கோபம் அடைந்த வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்ர். சபாநாயகரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வேல்முருகன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
லைவ் போய்ட்டிருக்கு.. இப்படி பண்றீங்களே” என சட்டமன்ற உறுப்பினர்களால் டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு வேல்முருகனுக்கு எச்சரிக்கை விடுத்து அமர வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் துரைமுருகன், கால்வாய் கீழ இருக்கு ஏரி மேலே இருக்கு… தண்ணிய மேல கொண்டு போகனும்னா செலவாகும் என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.