டில்லி

சீரம் இன்ஸ்டிடியூட் ஜூன் மாதத்தில் 10 டோஸ்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி செய்ய உள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத நிலையில் உள்ளதால் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   இதுவரை இந்திய அரசு கோவிஷீல்ட், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது.   இதில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உற்பத்தி செய்யும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி இதுவரை ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே போடப்படுகிறது    எனவே அனைவருக்கும் தடுப்பூசி போட உதவியாக மருந்துகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.

கோவிஷீல்ட் மருந்தை உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் “கொரோனா பாதிப்பால் எழுந்துள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ள சீரம் நிறுவன ஊழியர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்திய மக்களையும், உலகையும் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் சீரம் நிறுவனம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

நாங்கள் மத்திய அரசின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், எங்களுடைய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறோம்.    மே மாதத்தில் 6.5 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தித் திறன் கொண்டிருந்த சீரம் நிறுவனம், ஜூன் மாதத்தில் 10 கோடி டோஸ்களை உற்பத்தி செய்து தர முடியும் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன் ” என உறுதி அளித்துள்ளார்.