திருப்பதி

மிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஏழுமலையானைத் தரிசிக்க குடும்பத்தினருடன் திருமலைக்கு வருகை தந்தார்.

தேவஸ்தான அதிகாரிகள் துர்கா ஸ்டாலினை வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றைச் செய்தனர்.

துர்கா ஸ்டாலின் திருமலையில் தங்கி காலை அபிஷேக சேவையில் ஏழுமலையானைத் தரிசித்தார்.

துர்கா ஸ்டாலின் தரிசனம் முடித்து திரும்பியதும் \தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு வேத ஆசீர்வாதம் செய்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.