சென்னை:  தமிழக முதல்வராக முதன்முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ஸ்லின் முதல்வர் பதவி ஏற்றதை கண்ட அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆனந்த கண்ணீர் வடித்தார். இதை ஊடகங்களில் பார்த்தோர் நெகிழ்ச்சி அடைந்தனர். ஸ்டாலின் பதவி ஏற்றதைத்  தொடர்ந்து, 33 அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவி ஏற்றனர். அவர்களுக்கும் கவர்னர்  பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.