கோவை:

“சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது திமுகவினர்தான் அராஜகம் செய்தனர். அக் கட்சி உறுப்பினர் துரைமுருகன், மேஜை மீதேறி நடனமே ஆடினார்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
“தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது திமுகவினர்தான் அராஜகம் செய்தார்கள். அதிமுகவினர் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

திமுக வினர் ஜெய்தது ஜனநாயக விரோதம். அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அரசோட்சிய மண்டபத்தில் அராஜகம் நடந்தது. உடல் நலமில்லாத சபாநாயகர் தனபாலின் கை முறுக்கப்பட்டது.

தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன், மேஜை மீது ஏறி துரைமுருகன் நடனமே ஆடினார். மேலும், தாங்கள் பிளேடு வைத்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே அறுத்துக்கொள்வோம் என்றும் மிரட்டினார்.

தி.மு.க. கோரிய ரகசிய வாக்கெடுப்பு என்பது அம்பேத்கர் வரையறுத்த அரசியல் சட்டத்தில் இல்லை. 67 ஆண்டுகால இந்திய ஜனநாயகத்தில் இல்லை.
அப்படி செய்வது, குதிரை பேரத்தையே ஊக்குவிக்கும்” என்று வைகோ தெரிவித்தார்.