சென்னை
வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி, அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போட்டி இடுகின்றனர். இந்த தொகுதியில் ஏராளாமாக பணப் புழக்கம் உள்ளதாக தகவல்கள் வந்தன.
அதை ஒட்டி திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய பலரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கிடத்ததாக கூறப்பட்டன. அதை ஒட்டி வருமான வரித்துறை அளித்த தகவலின் பேரில் குடியரசு தலைவர் வேலூர் தொகுதி மக்களவை தேர்தலை ரத்து செய்தார்.
இதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துரைமுருகன், “குடியரசுத் தலைவர் வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்துள்ளது ஜனநாயகப் படுகொலை ஆகும். இதற்காக பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.