புதுமுக இயக்குனர் அருள் அஜித் இயக்கும் ‛இடும்பன்காரி’ படத்தில் ஷிவாதா நாயர் மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் அனுபமா குமார், ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், இயக்குநர் வேலுபிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார். அமீன் ஒளிப்பதிவு செய்ய அருண்ராஜ் இசையமைக்கிறார். துப்பறியும் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகி உள்ளது.