நீலகிரி
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பி வினாடிக்கு 10000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை, 2வது முறையாக நிரம்பி உள்ளது பில்லூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியதால் பவானி ஆற்றின் வழியாகச் செல்லக்கூடிய தண்ணீரால் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 97 அடியை எட்டியுள்ளது.
பில்லூர் அணையில் 1 நீர் மட்டம் முழு அளவை எட்டிய காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய 16,000 கன அடி தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதையொட்டி மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்காகவோ இறங்க வேண்டாம் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரையோர மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.