கவுகாத்தி
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுளன.
நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் நிகழும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தற்போது தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பங்கீடு செய்து வருகிறது. பல மாநிலங்களில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. சென்னை நகரில் இன்று தடுப்பூசி மருந்து பற்றாக்குறையால் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
அது போல அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் அனைத்து தடுப்பூசி முகாம்களும் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இது குறித்து உள்ளுர் வாசி ஒருவர், “எங்களுக்கு இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட தேதி அளிக்கபட்டுள்ளது. ஆனால் இங்கு வந்து பார்த்தால் தடுப்பூசி தட்டுப்பாடு என அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.