ஆக்ரா
நேற்று முன் தினம் இரவு ஆக்ராவில் சூறைக்காற்றுடன் இடி மழை பெய்ததால் நகரெங்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று முன் தினம் இரவு ஆக்ராவில் கடும் சூறைக்காற்றுடன் இடி மின்னல் மழை ஏற்பட்டுள்ளது.
இந்நகரில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ளது.
நகரெங்கும் வீசிய சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழையால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
பல இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளன.
அவ்வாறு தாஜ்மகால் பகுதியில் உள்ள பல மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
நுழைவுச் சீட்டு அளிக்குமிடம் மற்றும் சோதனை செய்யும் இடங்கள் மழையால் பாழடைந்துள்ளன.
பிரதான கட்டிடத்தில் உள்ள பளிங்கு அமைப்பில் யமுனை நதிநீர் எடுத்துச் செல்லுm இரும்புக் குழாய் வேகமாக உரசியதால் அது பாதிக்கப்பட்டுள்ளது.
தூண்களின் மேல் உள்ள சீல்கள் சில இடங்களில் கீழே விழுந்ததால் சுவர்கள், கதவுகள், ஜன்னல்களில் கீறல் விழுந்துள்ளன.
சிக்கந்தர் நினைவிடத்திலும் சிறு சிறு பாதிப்பு ஏறப்பட்டுள்ளது.