டில்லி,

மிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு பிஜேபியே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங் கூறியுள்ளார்.

அதிமுகவில் சிலர் தன்னை அசிங்கப்படுத்துவதாக முதல்வர் ஓபிஎஸ் நேற்று இரவு அதிரடி பேட்டி அளித்தார்.  அதைத்தொடர்ந்து, அவரது கட்சி பொறுப்பான பொருளாளர் பதவியை பறித்து சசிகலா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புக்கு பின்புலமாக இருந்து இயக்குவது பாரதியஜனதா என்று அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]