திண்டுக்கல்

தைப்பூச விழாவுக்காக பழனி வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

முருகன் கோவில்களில் தைப்பூச விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவது வழக்க்மாகும்.,  குறிப்பாக பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கானோர் கூடி முருகனை வழிபடுவர்.  இந்த வருடத்தில் இருந்து தைப்பூசம் அன்று தமிழக அர்சு விடுமுறையை அறிவித்துள்ளது.

ஆனால் பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  வரும் ஜனவரி 14 முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை பழனி முருகன் கோவிலுக்கு தினசரி 25000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.  கொரோனா கட்டுப்பாட்டை ஒட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கூறி உள்ளார்.

மேலும் அவர், “பழனி முருகன் கோவிலுக்குள் பக்தர்க்ள், தேங்காய், பழம் உள்ளிட்ட எவ்வித பூஜை பொருட்களும் கொண்டு வரக்கூடாது.   அது மட்டுமின்றி கோவிலுக்குள் வழக்கமாக செய்யும் அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட எவ்வித நேர்த்திக் கட்னகளையும் செய்யக் கூடாது” என உத்தரவிட்டுள்ளார்.