சென்னை
தமிழகத்தில் இந்திய சராசரியைப் போல் இரு மடங்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது.
இந்தியாவில் 42620 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 1395 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 11782 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பரவுவதைத் தடுக்க எவ்வித தடுப்பூசியும் கிடையாது.
இந்தியாவில் தனிமைப்படுத்தல், பரிசோதனை, தனிமையில் சிகிச்சை என்னும் கொள்கை பின்பற்றப்படுகிறது.
எனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயினும் கொரோனா பாதிப்பு தொடர்கிறது.
தற்போது அதிக அளவில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அகில் இந்திய அளவில் 10 லட்சம் பேரில் 708 பேர் சோதிக்கபட்டுள்ளன்ர்.
தமிழகத்தில் இதுவரை 3023 பேர் பாதிக்கப்பட்டு அதில் 30 பேர் உயிரிழந்து 1379 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு 1685 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர்.
இது இந்திய சராசரியைப் போல் இரு மடங்குக்கும் மேல் அதிகமாகும்.
சென்னையில் 10 லட்சம் பேருக்கு 5225 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர்.
இது இந்திய சராசரியைப் போல் 7 மடங்கு அதிகமாகும்.