சென்னை:
மிழகத்தில் கடந்த சில நாட்களாக அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில்,  திருவல்லிக்கேணி பகுதி  அம்மா உணவக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அங்கு சாப்பிட்டவர்களை தேடும்படி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  ஏற்கனவே தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் தீவிரமாக பரவிய நிலையில், தற்போது கோயம்பேடு மார்க்கெட் சென்றவர்கள் மூலம் மேலும் தீவிரமாக பரவி வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு  ஏனோதானோ வென்று நடவடிக்கை எடுத்து வருவதால், நாளுக்கு நாள் தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம்முழுவதும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  சென்னையில் மட்டுமே 203 பேருக்கு  தொற்று பரவியிருந்தது.
இநத நலையில், ஏழை, எளிய மக்களின் பசியை ஆற்ற அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டதால், அங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், தற்போது திருவல்லிக்கேணி  ஐஸ்அவுஸ் பகுதியின் கஜபதி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் 52 வயது பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி வெங்கடேசன் தெருவில் வசித்து வந்த இவர், தற்போது சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அந்த உணவகத்தில் சாப்பிட்ட மக்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.