டில்லி

ரெபோ வட்டி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பங்குச் சந்தை 554 புள்ளிகள் சரிந்துள்ளது.

இன்றைய பங்குச் சந்தை ஆரம்பத்தில் இருந்தே சரிவுடன் தொடங்கியது.   அதன் பிறகு ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 0.25 % குறைத்து அறிவித்தது.  இந்த ரெபோ வட்டி விகிதம் குறைவினால் வீடு மற்றும் வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைந்து மாத தவணை தொகையும் குறைய வாய்ப்புள்ளது.

தற்போது மாறியுள்ள 5.75% ரெபோ வட்டி கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாகும்.   இது முதலீட்டாளர்கள் மனநிலையை பாதித்திருக்கலாம் என கூறப்படுகிறது.   அதன் தாக்கம் இன்றைய பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது.

மும்பை வர்த்தக சந்தையில் இண்டஸ் இண்ட் வங்கி, எஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, எல் அண்ட் டி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் சுமார்6.75% அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.  தேசிய பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்குகள் 4.90% அளவுக்கு குறைந்தன.

மொத்தத்தில் இன்று சென்செக்ஸ் 554 புள்ளிகள் குறைந்துள்ளன.