சென்னை
கொதிகலன் பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகில் உள்ள மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்தில் 1வது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி, 2வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது 1வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டு பழுதானது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் பொறியாளர்கள் கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.,
Patrikai.com official YouTube Channel