
கொல்கத்தா
இந்தியா – இலங்கை மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் இன்று துவங்கியது. கொல்கத்தா ஈடன் மைதானத்தில் இன்று காலை தொடங்க இருந்த போட்டி மழை காரணமாக மதியம் துவங்கியது. டாஸில் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான இந்திய அணியை சேர்ந்த ராகுலும் தவானும் விளையாட ஆரம்பித்தனர். லக்மல் ராகுல், தவான் ஆகிய இரு வீரர்களையும் அவுட் செய்தார். இந்திய அணி வெறும் 13 ரன்கள் எடுத்து இரண்டு விக்கட்டுகளை இழந்துள்ளது. மீண்டும் மழை பெய்ததால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது
Patrikai.com official YouTube Channel