டில்லி

சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் கர்நாடக அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு தாமதம் ஆக உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத இருகட்சிகளும் இணைந்து அமைச்சரவை அமைக்க உள்ளன.   இரு கட்சிகளுக்கும் இடையே இலாகா ஒதுக்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.   கடந்த 23 ஆம் தேதி குமாரசாமி முதல்வராகவும் பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.   வேறு அமைச்சர்கள் யாரும் இன்னும் பதவி ஏற்கவில்லை.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வர இரு கட்சிகளும் எண்ணி இருந்தன.   இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.  அவருடன் ராகுல் காந்தியும் வெளிநாடு சென்றுள்ளார்.

ராகுல் காந்தி இன்னும் ஒருவாரம் கழித்து நாடு திரும்புவார் என்பதால் கர்நாடக மாநில அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டில் மேலும் தாமதம் ஏற்படும் என தெரிய வந்துள்ளது.  ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பின் அநேகமாக ஜுன் 4-5 தேதிகளில் ராகுல் காந்தி இது குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிய வந்துள்ளது.