சென்னை
பொங்கல் நெரிசலுக்காக 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
சென்னை நகரில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊரை விட்டு இங்கு வந்து பணி செய்கின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமாகும். ஆகவே ரயில்களில் கூட்ட நெரிசல் மிகவும் அதிகரிக்கும். இதைச் சமாளிக்க தெற்கு ரயில்வே 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கிறது.
இது குறித்த விவரம் வருமாறு :
சென்னை எழும்பூர் – சேலம் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்.22153) வரும் 17-ம் தேதியும்,
சேலம் – எழும்பூர் அதிவிரைவு ரயிலில் (22154) 16-ம் தேதியும்,
கோவை-நாகர்கோவில் அதிவிரைவு ரயிலில் (22668) 12, 13-ம் தேதியும்,
நாகர்கோவில்-கோவை அதிவிரைவு ரயிலில் (22667) 13, 14-ம் தேதியில்
தலா 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும்,
கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலில் (12084) 12, 13-ம் தேதியும்,
மயிலாடுதுறை – நாகர்கோவில் ஜனசதாப்தி ரயிலில் (22607) 12,13-ம் தேதியும்
தலா 2 இருக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும்.