திருவனந்தபுரம்

ன்று கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளதற்கு ஓணம் பண்டிகை தளர்வு எனக் கூறப்படுகிறது.

இன்று கேரளாவில் 31,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 38,83,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று 215 பேர் உயிரிழந்து இதுவரை 19,972 மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை இங்கு 38,92,628 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போது 1,70,292 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள், “கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.’ எனத் தெரிவித்துள்ளனர்.  தொற்று பரவல் விகிதம் 19 சதவிகிதத்தைத் தாண்டியதால் சுகாதாரத்துறை வல்லுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது. எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.