திருவனந்தபுரம்

ரும் 11 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வணிக வளாகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.  ஆனால் கேரள மாநிலத்தில் தொற்று அதிகரித்து வருகிறது.  நேற்று கேரள மாநிலத்தில், 20,367 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,33,918 ஆகி உள்ளது.  இதில் நேற்று 139 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,654 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,0265 பேர் குணமடைந்து மொத்தம் 32,37,579 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,78,166 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதே வேளையில் தொற்று அதிகரிப்பு உள்ள இடம் தவிர மற்ற இடங்களில் கேரள அரசு அனைத்து கடைகளையும் திறக்க திட்டமிட்டது.  அத்துடன் கடந்த சில மாதங்களாகச் சனி, ஞாயிறு நாட்களில் அமல்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு, இந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்று கேரளா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ளது. குறிப்பாக அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த மாதம் 22ஆம் தேதி ஓணம் பண்டிகை 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக வரும் 11ம் தேதி முதல் வணிக வளாங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ”காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வணிக வளாகங்கள் செயல்படலாம். கொரோனா நிபந்தனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.