துபாய்

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் துபாயில்  ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது.   உலக அளவில் 10.66 கோடி பேர் பாதிக்கப்பட்டு 23.26 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் துபாயில் 3.26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 921 பேர் உயிரிழந்துள்ளனர்.   கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் துபாயில் அதிகரித்து வருகிறது.

இதையொட்டி அங்கு ஊரடங்கு விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி மது பானக் கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தடுக்க திருமண வீடுகள் மற்றும் தனியார் பார்ட்டிகளில் அதிகபட்சமாக 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஷாப்பிங் மால்கள் 70% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அது மட்டுமின்றி உணவகங்கள், விடுதிகள் போன்றவை பகல் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.