சென்னை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை வானிலை ஆய்வு மையம் 4 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.  மழை நீர் தேங்குவதால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாகி உள்ளது;  நகரில் 4 சுரங்கப்பாதைக்குள் நீர்  புகுந்ததால் அவை மூடப்பட்டுள்ளன.   சென்னையில் கொங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை அரங்கநாதன் சுரங்கப்பாதை மற்றும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன.

சென்னையில் அதிக பட்சமாக இதுவரை எம் ஆர் சி நகரில் 20 செமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  தவிர நுங்கம்பாக்கத்தில் 18 செமீ மற்றும் மீனம்பாக்கத்தில் 13 செமீ மழை பெய்துள்ளது.

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு  மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்  எச்சரிக்கை விடுத்திருந்தது.  தற்போது அது சிவப்பு எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.  இந்த பகுதிகளில் மேலும் 6 மணி நேரத்துக்குக் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.