தராபாத்

தராபாத் நகரில் பெய்து வரும் கனமழையால் ஹுசைன் சாகர் ஏரியில் ஒரு சுவர் உடைந்துள்ளது.

நேற்று முதல் ஐதராபாத் நகரில் கன மழை பெய்து வருகிறது.  இதனால் நகரின் பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கி உள்ளது.  நகரில் திருமுல்கரி, அல்வால், குடிமால்கபூர், கர்வான், சந்தோஷ் நகர், சாலிபந்தா, பகதூர்புரா, மற்றும் ஆசிப் நகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் பல பகுதிகளில் மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது    ஐதராபாத் நகரின் பிரபல மருத்துவமனையான ஆஸ்மானியா பொது மருத்துவமனையில் இன்று காலை 3 மணி முதல் மின்சாரம் இல்லாத நிலை உள்ளதால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,.

ஐதராபாத் நகரின் உசைன் சாகர் ஏரியில் ஒரு  பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 200 வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.   அத்துடன் மேலும் சேதத்தைத் தடுக்க ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்படுவதால் அருகில் உள்ள பல வீடுகளும் வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு உள்ளன,

மழையால் பாதிக்கப்பட்ட ஐதராபாத் நகர்ப்பகுதிகளை நகர மேயர் ராம்மோகன் மற்றும் ஆணையர் சிக்தா பட்நாயக் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.   நகரின் பல பகுதிகளில் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.