துரகிரி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால் சதுரகிரி மலை ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குப் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

வரும் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சதுரகிரி கோவிலில் பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக 5 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சதுரகிரி செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே கனமழை காரணமாக சதுரகிரி மலையேறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் இம்மாதம் பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.