சென்னை

ன்று கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாகத் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   மேலும் வங்கக் கடலில் குறைந்த தாழ்வழுத்த மண்டலம் வலுவாகி வருவதாகக் கூறப்படுகிறது.  ஆகவே மழை மேலும் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் இனிப்பு, மலர்கள் கொடுத்து நேற்று வரவேற்றுள்ளனர்.

கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  மேலும் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் திண்டுக்கல்லில் கொடைக்கானலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]