டில்லி

ட இந்தியாவில் பெய்து வரும் கன மழையால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாகக் காஷ்மீர், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பதிவாகியுள்ளது.

இதனால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகக் கடந்த ஜுலை 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை சுமார் 300 சரக்கு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 406 பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர 600 சரக்கு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 500 பயணிகள் ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.